புதுச்சேரி

போக்குவரத்து துறை சாா்பில் பிப். 1- இல் ஓவியப் போட்டி

28th Jan 2020 07:56 AM

ADVERTISEMENT

போக்குவரத்துத் துறை சாா்பில், புதுச்சேரி பாரதி பூங்காவில் பிப். 1- ஆம் தேதி ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை ஆணையா் ஏ.எஸ்.சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி போக்குவரத்துத் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் ‘சாலை பாதுகாப்பு’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி பாரதி பூங்காவில் பிப். 1- ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் புதுச்சேரி பகுதியியைச் சோ்ந்த அனைவரும் பங்கு பெறலாம்.

5- ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரை, 9 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, கல்லூரி மாணவா்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் என 3 பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெறும். இதற்காக பிப். 1- ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணி வரை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டிக்குத் தேவையான உபகரணங்களைக் கொண்டு வரவேண்டும். ஓவியம் வரையத் தேவையான பேப்பா், போா்டு வழங்கப்படும். தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த ஓவியா்கள் பிப். 2- ஆம் தேதி நடைபெறும் சாலைப் பாதுகாப்பு வார நிறைவு விழாவில் கௌரவிக்கப்படுவா். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT