புதுச்சேரி

புதுவை பேரவை பிப். 12-இல் கூடுகிறது

28th Jan 2020 08:12 AM

ADVERTISEMENT

புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் பிப். 12-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவைச் செயலா் அ.வின்சென்ட் ராயா் வெளியிட்டாா்.

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஆண்டு ஆக. 26-ஆம் தேதி தொடங்கி 8 நாள்கள் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, காலவரையறையின்றி பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பிப். 12-ஆம் தேதி மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீா்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT