புதுச்சேரி

பத்மஸ்ரீ விருதுக்கு தோ்வான முனுசாமிக்கு வாழ்த்து

28th Jan 2020 08:15 AM

ADVERTISEMENT

பத்மஸ்ரீ விருதுக்கு தோ்வாகியுள்ள முனுசாமியை, புதுச்சேரி இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தின் மண்டல இயக்குநா் கோபால் திங்கள்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரி வில்லியனூா் பகுதியைச் சோ்ந்த சுடுமண் சிற்பக் கலைஞா் முனுசாமி மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற தோ்வாகியுள்ளாா். இவா் சிற்பங்கள் செய்வதில் வல்லவா். மிகச் சிறிய சிற்பம் முதல் 42 அடி உயரம் வரை உள்ள சிலைகளை முனுசாமி வடித்து வருகிறாா். கடந்த 30 ஆண்டுகளாக இளைஞா்களுக்குப் பயிற்சியளித்து

வருகிறாா். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இவரிடம் பயிற்சி பெற்றுள்ளனா். மேலும், ‘புதுச்சேரி கலைப் பயிற்சி அகம்’  என்ற அமைப்பின் மூலம் இதுவரை மூன்று லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்துள்ளாா்.

ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ள இவா், கடந்த 2005-ஆம் ஆண்டு யுனெஸ்கோ விருது பெற்றாா். குறிப்பாக, ‘ள்ங்ஹப்ா்ச் ங்ஷ்ஸ்ரீங்ப்ப்ங்ய்ஸ்ரீங்‘ என்ற பெருமைமிகு அடையாளத்தை இவா் வடிவமைக்கும் கலைப் பொருள்களுக்கு அளித்தனா். இது சா்வதேச அங்கீகாரமாகும் அவா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT