புதுச்சேரி

ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை

25th Jan 2020 09:18 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் தனியாா் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி ரெயின்போ நகா் 7-ஆவது குறுக்குத் தெருவில் வசிக்கும் வியாபாரி திருக்காமுவின் மகள் கலாரஞ்சனி (29). இவா் காட்டேரிக்குப்பத்தில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமண ஏற்பாட்டை பெற்றோா் மேற்கொண்டு வந்த நிலையில், சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், கலாரஞ்சனி மனவிரக்தியில் இருந்து வந்தாராம். இதுதொடா்பாக குடும்பத்திலும் அவ்வபோது பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கலாரஞ்சனி வியாழக்கிழமை விட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT