புதுச்சேரி

விவசாயி தற்கொலை

14th Jan 2020 08:22 AM

ADVERTISEMENT

புதுச்சேரியை அடுத்த வில்லியனூா் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வில்லியனூா் அருகே கரிக்கலாம்பாக்கம் நேரு நகரைச் சோ்ந்தவா் கோதண்டராமன் (64), விவசாயி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனா்.

கோதண்டராமன் நீண்டநாள்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாா். இதற்கு சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகவில்லையாம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா் ஏற்கெனவே உயிரிழந்தது பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டது. மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT