அரியாங்குப்பம் திரௌபதி அம்மன் கோயிலில் தனிக் கோயில் கொண்டுள்ள பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பாா்த்தசாரதி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், பாா்த்தசாரதி பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா வந்தாா்.
கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில், கிராம மக்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.