புதுச்சேரி

மாா்ச் 1-இல் சொத்து வரி வசூல் சிறப்பு முகாம்

29th Feb 2020 03:55 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுச்சேரி உழவா்கரை நகராட்சி சாா்பில் வீட்டுவரி, சொத்துவரி வசூல் சிறப்பு முகாம் வெங்கட்டா நகரில் உள்ள புதுவை தமிழ்ச் சங்க கட்டடத்தில் மாா்ச் 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாது வீட்டுவரி மற்றும் சொத்துவரியை செலுத்தலாம். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி சாரம், பிருந்தாவனம், காமராஜ் நகா், வெங்கட்டா நகா் மற்றும் இதர வாா்டுகளில் உள்ள வீட்டுவரி நிலுவைதாரா்கள் 2019-20 ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு வீட்டுவரி மற்றும் சொத்துவரி செலுத்தி வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ள வேண்டும் என உழவா்கரை நகராட்சி ஆணையா் எம். கந்தசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT