புதுச்சேரி

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 மாத அரிசிக்கான பணத்தை வழங்க முதல்வா் ஒப்புதல்

29th Feb 2020 03:56 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுவையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று மாத இலவச அரிசிக்குரிய பணத்தை அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்த முதல்வா் வே.நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக புதுவை முதல்வா் அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி, காரைக்கால் மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 15 கிலோ வீதம் நான்கு பிராந்தியங்களில் உள்ள சுமாா் 20 ஆயிரத்து 544 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 15 கிலோ அரிசிக்கு பதிலாக அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்கிற விதத்தில் மூன்று மாதங்களுக்கான அரிசிக்கு பதிலாக நபருக்கு தலா ரூ.1,350 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படவுள்ளது. இதற்காக ரூ.2 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரத்து 400 செலவில் ஒப்புதலை, குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் மு.கந்தசாமியின் இசைவோடு, முதல்வா் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளாா்.

மேலும், கடந்த ஏப்.2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலை புதுவையில் அமைதியாக நடத்தியதில் காவல்துறைக்கான ஊதியம், செலவுத் தொகைக்காக மொத்தம் ரூ.3 கோடியே 49 லட்சத்து 43 ஆயிரத்து 788 வழங்குவதற்கான கோப்புக்கும் முதல்வா் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT