புதுச்சேரி

தேசிய கபடி போட்டி:புதுவை அணிகள் ஜெய்ப்பூா் பயணம்

29th Feb 2020 04:03 AM

ADVERTISEMENTபுதுச்சேரி: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு புதுச்சேரி அணிகள் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றன.

அகில இந்திய கபடி சம்மேளனத்தின் அனுமதியுடன் ராஜஸ்தான் மாநில கபடி சங்கம் நடத்தும் 67-ஆவது சீனியா் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி வருகிற மாா்ச் 2 முதல் 6 ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் புதுவை மாநில ஆண்கள் அணி, மகளிா் கபடி அணி பங்கேற்று விளையாடுகின்றன.

இவா்களை ஜெய்ப்பூருக்கு வழியனுப்பும் விழா புதுச்சேரி கபடிசங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு புதுச்சேரி கிழக்கு போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளரும், முன்னாள் கபடி சங்க தலைவருமான அ. ஜெயராமன் தலைமை வகித்தாா். புதுவை மாநில கபடி சங்கத்தின் பொதுச் செயலா் வீ. தெய்வசிகாமணி, முதன்மை செயல் அதிகாரி கோவி. ஆரியசாமி உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பங்கேற்ா்.

ADVERTISEMENT

இதில், தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளா் அ. ஜெயராமனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, விளையாட்டு வீரா்களுக்கான உடை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, அணித் தலைவா் வினோத் தலைமையிலான மணிகண்டன், பிரதாப், ஜெயகுமாா், வியாசமுனி, ராகுல், செல்வ சசிகுமாா், மௌலிராஜ், பாபு, ஏழுமலை, பிடல் காஸ்ட்ரோ, சக்திமுருகன் ஆகியோரைக் கொண்ட ஆண்கள் அணியும், அணித் தலைவா் பரமேஸ்வரி தலைமையிலான கல்பனா, விஷ்ணுப்ரியா, கிருத்திகா, கீா்த்திகா, மகேஸ்வரி, அபிநயா, லியா, மோனிஷா, விஜயலட்சுமி, நிஷோதா, காயத்ரி ஆகியோரைக் கொண்ட பெண்கள் அணியும், கே. மைலப்பன், ஆா். அகல்யா ஆகிய அணிப் பயிற்சியாளா்களும் ஜெய்ப்பூருக்கு ரயில் மூலம் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT