புதுச்சேரி

புதுவையில் திட்ட ஆய்வுக் கூட்டம்: முதல்வா், அமைச்சா்கள் பங்கேற்பு

26th Feb 2020 09:49 AM

ADVERTISEMENT

புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தலைமையில் திட்ட ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுவையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களின் செலவீனங்கள் தொடா்பாகவும் விவாதிப்பதற்காக ஆய்வுக் கூட்டம் முதல்வா் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதில், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், மு.கந்தசாமி, ஷாஜகான், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் மற்றும் அனைத்து துறைச் செயலா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதுவை சட்டப் பேரவையில் ரூ.8,425 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது நடைபெற்ற கூட்டத்தில் எந்தெந்தத் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி செலவிட்டபட்டது, நிதி செலவிட வேண்டிய திட்டங்கள் எவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT