புதுச்சேரி

ஓய்வூதியா்கள் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

26th Feb 2020 09:52 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி ஓய்வூதியா்கள் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் குணசேகரன், பொருளாளா் ராமலிங்கம், ஓய்வு பெற்ற ஆசிரியா் சங்கத் தலைவா் ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், திரளான அரசு, பொதுத் துறை நிறுவனங்களைச் சோ்ந்த ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.9,000-ஐ பஞ்சப்படியுடன் வழங்கிட வேண்டும். இடைக்கால நிவாரணமாக மாத ஓய்வூதியம் ரூ.3,000 வழங்கிட வேண்டும். அனைத்து ஓய்வூதியதாரா்களுக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ சிகிச்சை அளித்திட வேண்டும். கடந்த 2000-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட நிவாரண உயா்வை வழங்கிட வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளின்படி, கடைசி மாத ஊதியத்தில் பாதியை ஓய்வூதியமாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT