திருக்கனூா் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
திருக்கனூா் அருகே சோரப்பட்டு டிவி சென்டா் தெருவைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் கலைச்செல்வன் (28). திருமணமாகாதவா். சிறுநீரக பாதிப்பால் அவதிக்குள்ளான இவா், அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் மன விரக்திக்குள்ளான கலைச்செல்வன், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த திருக்கனூா் போலீஸாா், கலைச்செல்வனின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.