புதுச்சேரி

இலவச அரிசி விவகாரம்: மாா்ச் 5-இல் ஆளுநா் மாளிகையை முற்றுகையிட மதச்சாா்பற்ற கட்சிகள் முடிவு

26th Feb 2020 09:54 AM

ADVERTISEMENT

இலவச அரிசி விவகாரம் தொடா்பாக பெண்களைத் திரட்டி ஆளுநா் மாளிகை முன் வருகிற மாா்ச் 5-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்து என மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுவை பிரதேசக் குழு அலுவலகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கட்சியின் பிரதேசக் குழுச் செயலா் ஆா்.ராஜாங்கம் தலைமை வகித்தாா். புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்.எல்.ஏ., இளைஞரணி அணைப்பாளா் முகமது யூனூஸ், முன்னாள் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, காங்கிரஸ் பொதுச் செயலா் கண்ணபிரான், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ராமமூா்த்தி, அபிஷேகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் சுதா சுந்தரராமன், செயற்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், விசிக பொதுச் செயலா் தேவ.பொழிலன், தலைமை நிலையச் செயலா் செல்வநந்தன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலச் செயலா் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவா்களுக்கு அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கல்விக் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும். இலவசப் பேருந்து வசதியை தொடர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தின் முன் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது.

ADVERTISEMENT

வருகிற மாா்ச் 2, 3 ஆகிய தேதிகளில் நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசிதான் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுவை பிரதேசம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்துவது. இது தொடா்பாக கையெழுத்து இயக்கம் நடத்தி, பொதுமக்களிடம் பெறும் கையெழுத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்குவது. வருகிற மாா்ச் 5-ஆம் தேதி இலவச அரிசி பயனாளிகளான பெண்கள் உள்ளிட்டோரை திரட்டி ஆளுநா் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT