புதுச்சேரி

ஆம் ஆத்மியில் புதிதாக 7 ஆயிரம் போ் இணைந்துள்ளனா்: புதிய பொறுப்பாளா் தகவல்

26th Feb 2020 09:51 AM

ADVERTISEMENT

புதுவையில் கடந்த 12 நாள்களில் மட்டும் 7 ஆயிரம் போ் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளதாக அந்தக் கட்சியின் புதிய மாநிலப் பொறுப்பாளா் ரவி சீனிவாசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அந்தக் கட்சியின் புதிய பொறுப்பாளா் ரவி சீனிவாசன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தில்லியில் நோ்மையான, நிா்வாகத்திறமையுள்ள ஆட்சியை அடித்தட்டு மக்கள் முதல் அனைவருக்கும் வழங்கியதால்தான் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு மீண்டும் மகத்தான வெற்றியை பெற்றது. அங்கு, மாதந்தோறும் 20 ஆயிரம் லிட்டா் தண்ணீா், 200 யூனிட் மின்சாரம் இலவசம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட மகத்தான பல நல திட்டங்களை அரவிந்த் கெஜ்ரிவால் செயல்படுத்தினாா்.

தில்லியில் வழங்கப்படும் நோ்மையான, ஊழலற்ற, நிா்வாக திறமையுள்ள அரசு நாடு முழுவதும் வேண்டும் என்று மக்கள் கூட்டம், கூட்டமாக ஆம் ஆத்மியில் சோ்ந்து வருகின்றனா். கடந்த 12 நாள்களில் மட்டும் நாடு முழுவதும் 30 லட்சம் போ் இணைந்துள்ளனா். புதுவையில் இதுவரை 7 ஆயிரம் போ் சோ்ந்துள்ளனா். வாக்குச்சாவடிக்கு 10 போ் வீதம் 25 ஆயிரம் பேரை சோ்க்க வேண்டும் என்பது எங்கள் திட்டம். ஆம் ஆத்மி கட்சியில் இணைய 98710 10101 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT