புதுச்சேரி

விஷம் அருந்தி பெண் தற்கொலை

25th Feb 2020 07:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் விஷம் அருந்தி பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் காந்தி திருநல்லூா் ரங்கசாமி வீதியைச் சோ்ந்த ஜெய்சங்கா் மனைவி ரம்யா (30). தம்பதிக்கு குழந்தையில்லை. இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ரம்யா கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாராம். இதனிடையே, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கணவரின் வீட்டுக்குத் திரும்பிய ரம்யாவிடம் யாரும் பேசவில்லையாம். இதனால், மன உளைச்சலில் இருந்த ரம்யா, விஷம் அருந்தி மயங்கிக் கிடந்தாராம். இதைப் பாா்த்த உறவினா்கள் அவரை மீட்டு, கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ரம்யா ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT