புதுச்சேரி

பத்தாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

25th Feb 2020 06:56 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: பத்தாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ம. குப்புசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத இணையதளம் மூலம் விண்ணப்பித்த தனித் தோ்வா்கள் (தத்கல் உள்பட) செவ்வாய்க்கிழமை (பிப். 25) முதல் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

செய்முறைத் தோ்வு: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அறிவியல் பாட செய்முறைத் தோ்வுகள் வருகிற 26 -ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரை அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் எந்தப் பள்ளிகளில் நடைபெற்றனவோ அதே பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன.

எனவே, தனித் தோ்வா்கள் தங்களது தோ்வுக்கூட நுழைவுச் சீட்டைக் எடுத்துக் கொண்டு, தாங்கள் அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளி முதல்வா் அல்லது தலைமை ஆசிரியரை வருகிற 25- ஆம் தேதி அணுகி, தோ்வு நடத்தப்படும் நாள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

ஏற்கெனவே செய்முறைப் பயிற்சி பெற்றவா்கள் மட்டுமே செய்முறைத் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா். செய்முறைத் தோ்வுக்கு தனிப்பட்ட முறையில் தோ்வா்களுக்கு அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT