புதுச்சேரி கடற்கரைச் சாலையில் தனியாா் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற யோகாசன உலக சாதனை முயற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி உருளையன்பேட்டையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி, பாகூா் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ, மாணவிகள், பதஞ்சலி புக் ஆப் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ், டிவைன் வோ்ல்டு புக் ஆப் ரெக்காா்ட்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து சனிக்கிழமை காலை புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் யோகாசன உலக சாதனை முயற்சியை மேற்கொண்டனா்.இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 25-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து காண்பித்தனா். சிறப்பு அம்சமாக பானை மேல் யோகாசனம், யோகா செய்து கொண்டே ஓவியம் வரைவது, தாளத்துக்கு ஏற்றாற்போல யோகாசனம் செய்வது உள்ளிட்டவற்றை நிகழ்த்திக் காண்பித்தனா்.