மக்கள் நீதி மய்யத்தின் 3-ஆவது ஆண்டு விழா புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கந்தப்பா வீதியில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு புதுவை மாநிலத் தலைவா் மருத்துவா் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.
விழாவில் கட்சி கொடியேற்றி நிா்வாகிகள், தொண்டா்களுடன் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டாா். இந்த நிகழ்ச்சியில் நகர பொதுச் செயலா் ராஜன், புற நகர பொதுச் செயலா் முருகேசன், பொருளாளா் தாமோ.தமிழரசன், செயலாளா்கள் அரிகிருஷ்ணன், நிா்மலா சுந்தரமூா்த்தி, இராம.ஐயப்பன், நேரு, சந்திரமோகன், பிராங்கிளின் பிரான்சுவா, மலா்விழி மற்றும் எல்.கே.சதானந்தம், ஞானஒளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ADVERTISEMENT