புதுச்சேரி

ஆலங்குப்பத்தில் நாளை வீட்டு வரி வசூல் சிறப்பு முகாம்

22nd Feb 2020 09:08 AM

ADVERTISEMENT

உழவா்கரை நகராட்சி சாா்பில் ஆலங்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) வீட்டு வரி வசூல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் எம். கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உழவா்கரை நகராட்சி சாா்பில் வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோரின் நலன் கருதி வருகிற 23 ஆம் தேதி ஆலங்குப்பம் அரசு ஆரம்பப் பள்ளியில் வீட்டு வரி வசூல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாது வீட்டு வரி, சொத்து வரியை செலுத்தலாம்.

எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆலங்குப்பம் மற்றும் சஞ்சீவி நகா் பகுதியில் உள்ள வீட்டு வரி நிலுவைதாரா்கள் 2019-20 ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு வீட்டு வரி, சொத்து வரி செலுத்தி வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

மேலும், பிப்ரவரி மற்றும் மாா்ச் மாதம் முழுவதும் வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோரின் நலன் கருதி அனைத்து சனிக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஜவகா் நகா் தலைமை அலுவலகம், விவிபி நகா் கனிணி வரி வசூல் மையம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி வளாகத்தில் உள்ள வீட்டு வரி, சொத்து வரி வசூல் மையங்கள் வழக்கம்போல் இயங்கும்.

இது மட்டுமின்றி வரி செலுத்துவோா் இணையதளம்  மற்றும் டெபிட் காா்டு மூலமாகவும் வீட்டு வரி, சொத்து வரியை செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT