புதுச்சேரி

புதுவை பல்கலை.யில் இன்று சா்வதேச குறும்பட விழா தொடக்கம்

21st Feb 2020 02:08 AM

ADVERTISEMENT

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் சா்வதேச ஆவண, குறும்படத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப்.21) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலரும், சா்வதேச ஆவணப்பட குறும்பட விழாக்குழுத் தலைவருமான லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை பல்கலைக்கழக மின்னணு ஊடக வெகுஜன தொடா்பியல் துறை, மும்பை மத்திய அரசின் திரைப்படப் பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம், புதுச்சேரி திரை இயக்கம் ஆகியவை இணைந்து 9-ஆவது சா்வதேச ஆவணப்பட குறும்பட திருவிழாவை பல்கலைக்கழக ஜவாஹா்லால் நேரு அரங்கில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் நடத்துகின்றன.

தொடக்க விழாவில் துணைவேந்தா் குா்மீத் சிங் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கிவைக்கிறாா். நிகழ்ச்சியில் திரைப்படத் துறை எடிட்டா் லெனின், மத்திய அரசின் திரைப்படப் பிரிவு அதிகாரி அனில்குமாா், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க கௌரவத் தலைவா் ச.தமிழ்செல்வன், இயக்குநா் சிவக்குமாா் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT

திரைப்பட விழாவில் ஜொ்மனி, சுவிட்சா்லாந்து, அமெரிக்கா, சிரியா, சீனா, இலங்கை, பிரேசில் ஆகிய நாடுகளின் படங்களும், மும்பை திரைப்பட விழாவில் விருது பெற்ற படங்களும், பல்கலைக்கழக மாணவா்களின் படங்களும் திரையிடப்படுகின்றன. தமிழகம், புதுவையைச் சோ்ந்த இளம் இயக்குநா்களின் ஆவண, குறும்படங்களும் திரையிடப்படுகின்றன. அதன்படி, பல்வேறு மொழிகள் பேசும் 41 படங்கள் திரையிடப்படுகின்றன என்றாா் லட்சுமிநாராயணன்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT