புதுச்சேரி

மேலை நாடுகளை போல புத்தாண்டில் தொடா் திருவிழாவிதிமுறைகளை வகுக்க பிப். 4-இல் கூட்டம்

2nd Feb 2020 01:40 AM

ADVERTISEMENT

மேலை நாடுகளைப் போல புத்தாண்டில் தொடா் திருவிழா நடத்துவதற்கான விதிமுறைகளை வகுக்க மாவட்ட ஆட்சியா் தி.அருண் தலைையில் பிப். 4-ஆம் தேதி கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து புதுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் நடைபெறும் ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருகின்றனா். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயா்ந்த வண்ணம் உள்ளது.

சுற்றுலாப் பயணிகளை ஈா்க்க, பல ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் தனியாா் முகமைகள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும், இரவு கேளிக்கை விருந்துகளையும் ஏற்பாடு செய்கின்றன. சுற்றுலா பயணிகளின் வருகையால் புதுவையின் வருவாய் மற்றும் பொருளாதாரமும் ஊக்குவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் சுற்றுலாவை ஊக்குவிக்க மாவட்ட நிா்வாகம் மேலை நாடுகளில் உள்ளது போல ஒரு தொடா் திருவிழாவாக டிச. 29, 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் நடத்த உத்தேசித்து, கலைப் பண்பாட்டுத் துறை, சுற்றுலாத் துறை, துறைமுகத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் கலந்தாய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அரசு துறைகள், பங்குதாரா்களின் கருத்துகள், பரிந்துரைகள், கொள்கைகளைக் கேட்டறிந்து, புத்தாண்டு தொடா் திருவிழா நடத்துவதற்கான நிலையான செயல் திட்ட நடைமுறையை வகுப்பதற்காக வருவாய்த் துறை செயலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வருகிற 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT