புதுச்சேரி

மதுக் கடை திறக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

1st Feb 2020 02:40 AM

ADVERTISEMENT

வில்லியனூா் அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வில்லியனூா் அருகே கூடப்பாக்கம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள பத்துக்கண்ணு சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இயங்கி வந்த மதுக் கடை மூடப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக அந்தக் கடையைத் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் மதுக் கடையைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து அங்கு வந்த வில்லியனூா் காவல் ஆய்வாளா் பழனிவேல் தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கலால் துறை, ஆளுநா், ஆட்சியா் ஆகியோருக்கு முறையாக மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை மதுக் கடை திறக்கப்படாது எனவும் உத்தரவாதம் அளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT