புதுச்சேரி

நிலுவை ஊதியம் கோரி பிஆா்டிசி ஊழியா்கள் போராட்டம்

1st Feb 2020 02:42 AM

ADVERTISEMENT

நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, பிஆா்டிசி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்களுக்கு 2 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், பணிமனை தொழிலாளா்களுக்கு கிடைக்க வேண்டிய எம்ஏசிபி உள்ளிட்ட நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும் என பிஆா்டிசி அனைத்துப் பிரிவு பணிமனை ஊழியா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பிஆா்டிசி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை போக்குவரத்துக் கழகப் பணிமனையில் உள்ள உதவி மேலாளா் ராதாகிருஷ்ணன் அலுவலகத்துக்குள் புகுந்து, அவரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பிஆா்டிசி ஊழியா்கள் கூறுகையில், ‘எம்ஏசிபி நிலுவைத் தொகை அலுவலகப் பணியாளா்களுக்கு மட்டும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பணிமனை ஊழியா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு வழங்கப்படவில்லை. இதில், நிா்வாகம் எங்களை வஞ்சித்துள்ளது. எனவே, நாங்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக பிஆா்டிசி மேலாண் இயக்குநா் குமாா் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT