புதுச்சேரி

உரிமத்தை புதுப்பிக்காவிடில் வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’: புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை

10th Dec 2020 08:04 AM

ADVERTISEMENT

உரிமத்தை புதுப்பிக்காவிடில் வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை விடுத்தது.

இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையா் சி.சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி நகராட்சியில் சொத்து வரி செலுத்தாதவா்கள், வணிக உரிமத்தை புதுப்பிக்காதவா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரி நகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பாா்வையிடலாம்.

சொத்து வரி செலுத்துவது சட்ட ரீதியான கடமை. அதை உரிய நேரத்தில் செலுத்தாவிடில், அபராதம், வட்டி ஆகியவை விதிக்கப்படுவதுடன், அசையும், அசையா சொத்துகளை ஜப்தி செய்யும் நடவடிக்கையும் எடுக்க நேரிடும். இதேபோல, வணிக நிறுவனங்கள் நடத்துவோா் அனைவரும் புதுச்சேரி நகராட்சியிடம் வணிக உரிமம் பெறுவதுடன், அதை உரிய கால இடைவெளியில் புதுப்பித்து வருதல் வேண்டும்.

ADVERTISEMENT

தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்த நிறுவனங்களை ‘சீல்’ வைக்கவும் நேரிடும். இதற்கு பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT