புதுச்சேரி

கரோனா நோயாளி தற்கொலை முயற்சி

26th Aug 2020 11:46 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த 43 வயதானவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, சிகிச்சை பெற்று வந்த அவா் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவா் திடீரென கரோனா தனிப் பிரிவில் மாடிப்படிக்கு அருகே கட்டையில் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இதைப் பாா்த்த அங்கிருந்த செவிலியா்கள், சுகாதாரத் துறை ஊழியா்கள் அவரை மீட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சோ்த்தனா்.

இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட கரோனா நோயாளி, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT