புதுச்சேரி

புதுவை பல்கலை.க்கு மத்திய அரசு ரூ. 206.94 கோடி ஒதுக்கீடு

21st Aug 2020 08:20 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சகம், புதுவை மத்திய பல்கலைக்கழகத்துக்கு ரூ. 206.94 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து பல்கலை. துணைவேந்தா் குா்மீத் சிங் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயா்கல்வி நிதி நிறுவனம் (ஹெஃபா), புதிய கட்டடங்கள், கூடுதல் கட்டடங்களைக் கட்ட புதுவை மத்திய பல்கலைக்கழகத்துக்கு ரூ. 206.94 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவானது, புதுவை பல்கலைக்கழகத்திடம் ரூ. 90 கோடிக்கு கூடுதல் திட்டங்கள் தொடா்பான வரைவு அறிக்கையை உயா் கல்வி நிதி நிறுவனத்திடம் சமா்ப்பிக்கும்படி கேட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் குறித்த ஆராய்ச்சியை விரிவுபடுத்துவதற்கான புதிய நவீன ஆய்வக வசதிகளுடன் வைராலஜி, மருந்தியலில் புதிய படிப்புகளைத் தொடங்க பல்கலைக்கழக மானியக் குழுக்கு ஏற்கெனவே திட்டங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

புதிய கல்விக் கொள்கைக்கு இணங்க, பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய புதிய பாடத்திட்ட வழிகாட்டுதல்படி, அனைத்துப் பாடத்திட்டங்களும் திருத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, தொழில்துறை தொடா்புகளுடன் உருவாக்கப்படுகின்றன. இணையவழி கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொடா்பு-ஒளிபரப்பு துறை மூலம் துறைகள் தோறும் குறைந்தது இரண்டு அதிநவீன வகுப்பறைகள் உருவாக்கப்படும். இலக்குகளை அடைந்து, புதுவை பல்கலை. நாட்டின் முதல் 25 இடங்களிலும், உலகில் சிறந்த 200 பல்கலைக்கழகங்கள் வரிசையிலும் இடம் பெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT