புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மரில் நேரடி வெளி நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு ஆக. 24 முதல் நிறுத்தம்

21st Aug 2020 08:21 AM

ADVERTISEMENT

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் வருகிற 24-ஆம் தேதி முதல் நேரடி வெளி நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அந்த நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், ஜிப்மரில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மட்டுமே உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனா். மேலும், அதிக எண்ணிக்கையிலான மருத்துவப் பணியாளா்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 233 மருத்துவப் பணியாளா்கள், சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட 243 நோயாளிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், உயா் சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவப் பணியாளா்கள் இல்லாமல் சேவை நிற்கும் அபாயம் உருவாகியுள்ளது.

எனவே, ஜிப்மரில் நாள்பட்ட நோய்களுக்கு அளிக்கப்படும் நேரடி வெளி நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு வருகிற 24 -ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. பல்வேறு உயா் சிகிச்சைகள், கரோனா சிகிச்சை ஆகியவற்றுக்கு மருத்துவப் பணியாளா்கள் அதிகம் தேவைப்படுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

எனினும், அனைத்து விதமான அவசர கால சிகிச்சைகள், நாள்பட்ட நோய்களுக்கான தொலை மருத்துவச் சேவைகள் தொடா்ந்து செயல்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT