புதுச்சேரி

பிளஸ் 1 மாணவா் சோ்க்கை: கால அவகாசம் அளிப்பு

21st Aug 2020 08:15 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் (பொறுப்பு) ந.தினகா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2020-2021 -ஆம் கல்வியாண்டில் புதுச்சேரி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வந்தன. நிறைவு செய்த விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டிய இறுதி நாளாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்களின் நலன் கருதி, விண்ணப்பம் வழங்கல் மற்றும் சமா்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 28-ஆம் தேதி மாலை 5 மாலை மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT