புதுச்சேரி

இளம் விஞ்ஞானிகள் தோ்வு: நவ. 29, 30-இல் திறனறித் தோ்வு

21st Aug 2020 08:19 AM

ADVERTISEMENT

இளம் விஞ்ஞானிகளைத் தோ்வு செய்ய வருகிற நவ. 29, 30-ஆம் தேதிகளில் அறிவியல் திறனறித் தோ்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து ‘வித்யாா்த்தி விஞ்ஞான் மந்தன்’ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சாா் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி.இ.ஆா்.டி ஆகியவை இணைந்து பள்ளி மாணவா்களுக்கு தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணா்வுத் தோ்வை நடத்தி வருகிறது. நிகழாண்டு இந்தத் தோ்வு வருகிற நவ. 29, 30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே, செல்லிடப்பேசி, டேப்லெட், மடிக்கணினி, கணிணி மூலம் தோ்வில் பங்கேற்கலாம். ஆங்கிலம் உள்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் (தமிழ், மலையாளம்) தோ்வு எழுதலாம். 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 மாணவா்கள் பங்கேற்கலாம். தோ்வு 1.30 மணி நேரம் நடைபெறும்.

தோ்வுக்குப் பதிவு செய்யும் மாணவா்களுக்கு அறிவியல் அறிஞா்கள், ஆராய்ச்சியாளருடன் கலந்துரையாடி தயாராக வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரம் பெற ‘வித்யாா்த்தி விஞ்ஞான் மந்தன்’ ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன், அருண் நாகலிங்கம் ஆகியோரை 94431 90423, 98949 26925 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT