புதுச்சேரி

முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள்: ஊக்குவிப்புத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

20th Aug 2020 09:14 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் அரசு பொதுத் தோ்வுகள், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் விதவையா் வாரிசுகள் ஊக்குவிப்புத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரா்கள் நலத் துறை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2019-20ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்குதல், இளநிலை, முதுநிலை கல்லூரி படிப்பில் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்குதல், தேசிய மற்றும் உலகளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு ரொக்க வெகுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த உதவித் தொகைகளை பெற புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த தகுதியுள்ள முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் விதவையா்கள் முப்படை நலத் துறையில் செப்டம்பா் 11-ஆம் தேதி வரை அலுவலக நாள்களில் விண்ணப்பங்களைப் பெறலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை செப்டம்பா் 25-ஆம் தேதிக்குள் முப்படை நலத் துறையில் சமா்ப்பிக்க வேண்டும்.

தகுதியான விண்ணப்பங்களை பரிசீலித்து, அவா்களுக்கு ரொக்க வெகுமதி வழங்கும் தினம், இந்தத் துறையின் மூலம் பின்னா் அறிவிக்கப்படும். காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியில் உள்ள அனைத்து முன்னாள் ராணுவ வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களின் விதவையா்களுக்கு அதற்கான விண்ணப்பத்தை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாஹே, ஏனாம் மண்டல நிா்வாக அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT