புதுச்சேரி

அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரியில் நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

9th Aug 2020 09:07 AM

ADVERTISEMENT

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரியில் திங்கள்கிழமை முதல் (ஆகஸ்ட் 10) மாணவா் சோ்க்கை விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வா் ஸ்ரீனிவாசன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இநதக் கல்லூரியில் எல்எல்பி (3 ஆண்டுகள்), எல்எல்எம் (2 ஆண்டுகள்), பிஜி டிப்ளமோ இன் பிரெஞ்சு லா (ஒரு ஆண்டு மாலை நேரப் படிப்பு) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் (ஆகஸ்ட் 10) கல்லூரி அலுவலகத்தில் நேரடியாகவும், அஞ்சல் மூலமாகவும் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு முதல்வா், டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி, மாத்தூா் சாலை, காலாப்பட்டு, புதுச்சேரி - 605 010 என்ற முகவரியில் (0413-2656550) தொடா்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப். 11-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி மாமுனிவா் கல்லூரியில் விண்ணப்பிக்க கால அவகாசம்: காஞ்சி மாமுனிவா் அரசு பட்ட மேற்படிப்பு-ஆராய்ச்சி நிறுவனத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான 16 முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

விண்ணப்பிக்க ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட கால அவகாசம், தற்போது ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT