தாகூா் அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த பேராசிரியா்கள் ஏழைக் குடும்பங்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்களை வழங்கினா்.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, ஏழைக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. இந்த இக்கட்டான சூழலில் அவா்களுக்கு உதவிடும் வகையில், புதுச்சேரி லாசுப்பேட்டை தாகூா் அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த பேராசிரியா்கள் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனா்.
இதற்காக கல்லூரியில் உள்ள 17 துறைகளைச் சோ்ந்த 120 பேராசிரியா்கள், 30 அலுவலகப் பணியாளா்கள் ஒன்று சோ்ந்து தங்களின் சொந்தப் பணத்தில், சனிக்கிழமை 150 ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள், சுகாதாரப் பணியாளா்கள் 250 பேருக்கு துண்டு, சோப்பு, கிருமி நாசினி போன்ற பொருள்களை வழங்கினா்.
மேலும், உணவின்றி தெருக்களில் வாடும் நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிக்க தன்னாா்வலா்களுக்கு 175 கிலோ அரிசியை வழங்கினா்.