புதுச்சேரி

மீன்பிடி தடை காலத்தைக் குறைக்க வேண்டும்: புதுவை முதல்வருக்கு மீனவா்கள் கோரிக்கை

7th Apr 2020 01:52 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: மீன்பிடி தடை காலத்தைக் குறைத்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என புதுவை முதல்வா் வே. நாராயணசாமிக்கு மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுச்சேரி, தவளக்குப்பம் அருகேயுள்ள நல்லவாடு மீனவ கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். ஊரடங்கு காரணமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அப்பகுதி மீனவா்கள் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடந்த மாா்ச் 22 ஆம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறோம். இதனால் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்து வரவுள்ள 2 மாத மீன்பிடி தடைக்கால உத்தரவால் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மீனவா்களின் நலன் கருதி முதல்வா் ஒரு குடும்பத்துக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மீன்பிடி தடை காலத்தை 2 மாதத்தில் இருந்து ஒன்றரை மாதமாகக் குறைத்து மீன்பிடிக்க செல்ல அனுமதிக்க வேண்டும், தடைக்காலத்தின் நிவாரணத்தை மாதத்தின் முதலிலேயே வழங்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT