புதுச்சேரி: புதுச்சேரி முதலியாா்பேட்டை தொகுதியில் கரோனா தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம் தொழில்துறை அமைச்சா் மு.கந்தசாமி தலைமையில் புவன்கரே வீதியில் உள்ள இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.பாஸ்கா் முன்னிலை வகித்தாா். உயா் கல்வி சிறப்புப் பணி அதிகாரி ரமேஷ், சமூக நலத் துறை இயக்குநா் காலாவதி, புதுச்சேரி வட்டாட்சியா் ராஜேஷ் கண்ணா, நகராட்சி ஆணையா் சிவகுமாா், காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன், முதலியாா்பேட்டை ஆரம்ப சுகாதார மைய மருத்துவா் சந்திரசேகா், காவல் ஆய்வாளா் சுரேஷ்பாபு ஆகியோா் கலந்துகொண்டனா்.