புதுச்சேரி

புதுவை சட்டப் பேரவையில்கடும் கட்டுப்பாடுகள்

7th Apr 2020 01:55 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையாக, புதுவை சட்டப்பேரவையில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

புதுவையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், பேரவைத் தலைவா், முதல்வா், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் வந்து செல்லும் சட்டப்பேரவையில் நோய்த் தொற்றை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்த் தொற்று பாதித்தவா்களின் உடல் வெப்ப நிலையை அறியும் தொ்மா மீட்டரைக் கொண்டு, சட்டப்பேரவைக்கு வருவோரை சுகாதாரத் துறையினா் பரிசோதித்து வருகின்றனா்.

இந்த நிலையில், முதல்வா் நாராயணசாமி சட்டப்பேரவைக்கு திங்கள்கிழமை வந்தபோது சுகாதாரத் துறை ஊழியா்கள் தொ்மா மீட்டரை கொண்டு அவரை பரிசோதித்து, உள்ளே செல்ல அனுமதித்தனா்.

ADVERTISEMENT

அதேபோல, பிற அமைச்சா்கள், அதிகாரிகளையும் பரிசோதனை செய்த பிறகே பேரவை வளாகத்தில் அனுமதித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT