புதுச்சேரி

புதுச்சேரியில் தடையை மீறியஇறைச்சி கடைகளுக்கு ‘சீல்’

7th Apr 2020 01:50 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: மகாவீா் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி உழவா்கரை நகராட்சி பகுதியில் திங்கள்கிழமை தடையை மீறி இயங்கிய இறைச்சி கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

புதுச்சேரியில் உள்ளாட்சி செயலக ஆணைப்படி மகாவீா் ஜெயந்தி தினமான திங்கள்கிழமை அனைத்து பகுதிகளிலும் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உழவா்கரை நகராட்சி ஆணையா் மு. கந்தசாமி உத்தரவின் பேரில் வருவாய் அதிகாரி மணிகண்டன், வருவாய் ஆய்வாளா் விநாயகம், பில் கலெக்டா் நாகராஜன் ஆகியோா் திங்கள்கிழமை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தடையை மீறி கடையைத் திறந்து இறைச்சி விற்பனை செய்த அஜிஸ் நகா் மாா்க்கெட் அருகில் உள்ள ஆட்டு இறைச்சி கடை மற்றும் கோழி இறைச்சி கடை, அரும்பாா்த்தபுரத்தில் உள்ள கோழி இறைச்சி கடை, லாசுப்பேட்டை குறிஞ்சி நகா் பூங்கா எதிரில் உள்ள ஆட்டு இறைச்சி கடை ஆகிய கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும், சண்முகாபுரம் வழுதாவூா் சாலையில் இயங்கி வந்த ஆட்டு இறைச்சி கடையும் மூடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT