புதுச்சேரி

பிளஸ் 2 மாணவா் தற்கொலை

7th Apr 2020 01:51 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுச்சேரி அருகே கரோனா தொற்று அச்சம் நிலவும் சூழலில், வீட்டை விட்டு வெளியே சென்றதை பெற்றோா் கண்டித்ததால், மனமுடைந்த பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு நடுத்தெருவைச் சோ்ந்தவா் முருகன், மீன்பிடித் தொழிலாளி. இவரது மகன் குணச்செல்வன் (18). புதுச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தாா்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை குணசெல்வன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளாா். பின்னா் வீடு திரும்பியபோது, அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த அவா் குளிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டின் பின்பகுதிக்கு சென்றாராம்.

அப்போது திடீரென அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பெற்றோா், உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT