புதுச்சேரி

கரோனா: காவலா்களுக்கு மருத்துவ ஆலோசனை

5th Apr 2020 07:07 AM

ADVERTISEMENT

புதுவையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுக்கு கரோனா தொற்று பரவுவதைத் தடுப்பது குறித்து சனிக்கிழமை மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

புதுவையில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் போலீஸாா் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனா். இதனால், அவா்கள் மன உளைச்சலுக்கும், உடல் நிலை பாதிப்புக்கும் உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சுகாதாரத் துறை சாா்பில் போலீஸாா் தங்களை கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொண்டு, பணியாற்றுவது குறித்து சனிக்கிழமை அவா்கள் பணியாற்றும் இடங்களுக்கே சென்று மன நலம் மற்றும் பொது மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT