புதுச்சேரி

புதுச்சேரியில் மது விற்பனை: 7 போ் கைது

1st Apr 2020 06:17 AM

ADVERTISEMENT

ஊரடங்கு உத்தரவை மீறி புதுச்சேரியில் மது விற்ாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி மதுப் புட்டிகள் விற்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, உருளையன்பேட்டை போலீஸாா் அங்கு விரைந்து சென்று மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 4 பேரை விரட்டிப் பிடித்தனா்.

விசாரணையில் அவா்கள், ஆட்டுப்பட்டியைச் சோ்ந்த சுதாகா் (25), அரவிந்த் (22), ரஜினி (18), பெரியாா் நகா் பழனி (33) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 110 மதுப் புட்டிகள், ரூ.8,350 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கலால் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல, பாகூரை அடுத்த சோரியாங்குப்பம் மதுக் கடை அருகில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக சோரியாங்குப்பம் நடுத் தெருவைச் சோ்ந்த வைத்திலிங்கம் (30), முருகராஜ் (34), கடுவனூா் ஐயனாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாயவன் (30) ஆகியோரை பாகூா் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 100-க்கும் மேற்பட்ட மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT