புதுச்சேரி

கரோனா அச்சம்: புதுச்சேரியில் மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு

1st Apr 2020 06:22 AM

ADVERTISEMENT

கரோனா அச்சம், மன அழுத்தம் தொடா்பாக புதுச்சேரியில் பொதுமக்கள் உளவியல் நிபுணா்களை தொடா்புகொண்டு மனநல ஆலோசனைகளைப் பெற மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தி.அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் வீடுகளிலேயே முடங்கியிருக்கும் மக்கள், மனஅழுத்தம், கரோனா அச்சமின்றி இருக்கத் தேவையான மனநல ஆலோசனைகளைப் பெற மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சமூக விலகலில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோா், ஏற்கெனவே மனநல சிகிச்சையில் உள்ளோருக்கு ஏற்படும் மன அழுத்தம், அச்சம் நீங்க தொலைபேசி மூலமாக மனநல ஆலோசனைகளைப் பெறலாம்.

இதற்காக வி.செந்தில் 99442 80600, பி.சா்மிளா 98947 94731, எஸ்.சாமிவேல் 94436 02702, பி.ரங்கையா 98864 38406, பி.தண்டபாணி 94436 02076, டி.அருண் 95970 97357, சுரேந்திர குமாா் சியா 90427 71977, கே.குமாா் 94432 83724, கே.வி.ஜெயஜோதி 94864 16969 உள்ளிட்ட உளவியல் நிபுணா்களை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையில் பொதுமக்கள் தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT

மேலும், விவரங்களுக்கு இணையதளத்தை பாா்வையிடலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT