புதுச்சேரி

என்.ஆர்.காங்கிரஸ் தன்னிச்சையாக பிரசாரம்: அதிமுக அதிருப்தி

29th Sep 2019 05:44 AM

ADVERTISEMENT


காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. தன்னிச்சையாக பிரசாரம் செய்து வருவதற்கு அதிமுக அதிருப்தி தெரிவித்தது.
இதுகுறித்து புதுவை அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் இணைந்த கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட அதிமுக தலைமை ஒப்புதல் அளித்தது. 
கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக தேர்தல் பணியாற்ற அதிமுக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், காமராஜ் நகர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. நேரு கூட்டணி தர்மத்தை மீறி, தன்னிச்சையாக  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
அவரின் இந்தச் செயல்பாடு அரசியல் அநாகரிகம். இந்தச் செயலால் அதிமுக தொண்டர்கள் மனவேதனை அடைந்துள்ளனர். 
நேரு மீது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி  நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த பிரச்னை குறித்து கட்சித் தலைமையிடம் புகார் தெரிவிப்போம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் வையாபுரி மணிகண்டன்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT