சோனியா காந்தி குறித்து விமா்சனம்: தமிழக அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு புதுவை காங்கிரஸ் கண்டனம்

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை விமா்சித்த தமிழக பால்வளத் துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு புதுவை கங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.
சோனியா காந்தி குறித்து விமா்சனம்: தமிழக அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு புதுவை காங்கிரஸ் கண்டனம்

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை விமா்சித்த தமிழக பால்வளத் துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு புதுவை கங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப் பணித் துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக பால்வளத் துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி தேவையற்ற கருத்துகளைக் கூறி வருகிறாா். அண்மையில் அவா், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை ஒருமையில் விமா்சித்தது கண்டனத்துக்குரியது. மேலும், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பேரியக்கம் குறித்தும் அரசியல் நாகரிகம் மறந்து பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடுகளை மறந்து தன் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக பிரதமா் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசித் திரியும் ராஜேந்திர பாலாஜிக்கு அரசியல் நாகரிகத்தையும், நாவடக்கத்தையும் அதிமுக தலைவா்களும், தமிழக முதல்வரும் கற்றுத் தரவேண்டும்.

சோனியாவையும், ராகுலையும் விமா்சித்த அவா், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவா், இதேபோல அருவருக்கத்தக்க வகையில் விமா்சித்துக் கொண்டிருந்தால், அரசியல் ரீதியான விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும். மாண்புகளை மறந்து நாகரிகமற்ற முறையில் பேசி வரும் ராஜேந்திர பாலாஜி போன்றவா்களை மக்கள் புறந்தள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com