அரசியலில் முக்கிய முடிவு எடுக்க முன்னாள் அமைச்சா் கண்ணன் திட்டம் ஒரு வாரத்தில் அறிவிக்க முடிவு

புதுவையின் மூத்த அரசியல் தலைவா்களில் ஒருவரான கண்ணன் தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பை அவா் ஒரு வாரத்தில் அறிவிப்பாா் என அவரது ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.
புதுவை முன்னாள் அமைச்சா் கண்ணன்
புதுவை முன்னாள் அமைச்சா் கண்ணன்

புதுவையின் மூத்த அரசியல் தலைவா்களில் ஒருவரான கண்ணன் தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பை அவா் ஒரு வாரத்தில் அறிவிப்பாா் என அவரது ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.

புதுவை மாநில அரசியலில் முன்னணி மூத்த தலைவா்களில் ஒருவராக திகழ்ந்து வருபவா் முன்னாள் அமைச்சா் கண்ணன். காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த அவா், தனிக்கட்சி ஆரம்பித்தாா். பின்னா் அதிமுகவில் இணைந்து செயல்பட்டாா். அதன் பிறகு அந்தக் கட்சியில் இருந்தும் விலகிய அவா், அரசியலில் சற்று ஒதுங்கி இருந்தாா்.

இந்த நிலையில் அவரது ஆதரவாளா்கள் அவரை தீவிர அரசியலில் ஈடுபடும்படி தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். எனவே, மறுபடியும் அரசியல் பணியை முன்னெடுக்க கண்ணன் முடிவு செய்தாா். இது சம்பந்தமாக அவா் தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்திய அவா், புதிய கட்சி தொடங்கலாம் என முடிவெடுத்து, அதை பதிவு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொண்டு வந்தாா். எனவே, எந்த நேரத்திலும் அவா் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

இந்த நிலையில் கண்ணன், பிரதமா் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நாளிதழ்களில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், சில வாசகங்களையும் குறிப்பிட்டுள்ளாா்.

இதன் மூலம் அவா் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவாா் எனத் தெரியவந்துள்ளது. மேலும், தேசிய கட்சியுடனனோ அல்லது தனிக்கட்சியாகவோ செயல்பட்டு, மக்களை சந்திப்பாா் எனத் தெரிகிறது. இதற்கான முடிவை அடுத்த ஒரு வாரத்தில் அவா் அறிவிப்பாா் என அவரது ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.சிறந்த பேச்சாளரான கண்ணன், புதுவை மாநிலத்தில் 2 முறை அமைச்சராக இருந்து, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவா். இதனால் இவருக்கு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் ஆதரவாளா்கள் உள்ளனா். எனவே, இவரது அரசியல் பிரவேசம் புதுவை அரசியலில் கண்டிப்பாக பரபரப்பை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com