புதுச்சேரி

விவசாயிகள் திருவிழா

7th Sep 2019 08:52 AM

ADVERTISEMENT

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் உத்தரவின் பேரில், புதுவை பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் திருவிழா அண்மையில் நடைபெற்றது. 
வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. கமலக்கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விழாவை குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, விவசாயத்தில் தண்ணீர் சிக்கனத்தின் அவசியம் குறித்து பேசினார்.
முன்னதாக, நிலைய முதல்வர் அ. ராமமூர்த்தி வரவேற்றார். ஊசுடு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ. தீப்பாய்ந்தான், விவசாயிகள் நலத் துறை இயக்குநர் பா.பாலகாந்தி, மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.செல்வகணபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 
கூடுதல் வேளாண்மை இயக்குநர் சி.வசந்தகுமார், இணை இயக்குநர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில், தண்ணீர் சேமிப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாக விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கண்காட்சிகள், செயல் விளக்கங்கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் பங்கேற்று பயனடைந்தனர். வேளாண்மை நிலைய பூச்சியியல் வல்லுநர் நி. விஜயகுமார் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT