புதுச்சேரி

தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா

7th Sep 2019 08:55 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் முதல்வர் வே. நாராயணசாமி நோக்கவுரையாற்றார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் எஸ். யஷ்வந்தய்யா வரவேற்றார். சமூக நலத் துறை அமைச்சர் மு. கந்தசாமி சிறப்புரையாற்றினார். அரசு செயலர் (நலத் துறை) ஆர்.ஆலிஸ்வாஸ் வாழ்த்துரையாற்றினார்.
மருத்துவர் பி.கயல்விழி கருவுற்ற மற்றும் பாலூட்டும் பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 
குழந்தைகளின் எடை, வளர்ச்சி கண்காணிப்பு குறித்து மருத்துவர் அஜ்மல் விளக்கினார். குழந்தைகளின் வளர்ச்சி, ரத்த சோகை, சுத்தம் மற்றும் சுகாதாரம், ஊட்டச்சத்து உணவு ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்வில் கல்வித் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சமூக நலத் துறை, நலவழித் துறைகளின் அதிகாரிகள், கருவுற்ற மற்றும் பாலூட்டும் பெண்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT