புதுச்சேரி

தமிழ் தெரிந்த அதிகாரிகளை  புதுவைக்கு அனுப்ப வலியுறுத்தப்படும்: முதல்வர் நாராயணசாமி

7th Sep 2019 08:50 AM

ADVERTISEMENT

தமிழ் தெரிந்த அதிகாரிகளை புதுவைக்கு அனுப்பிவைக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தில் அரசுக் கொறடா ஆர்.கே.ஆர்.அனந்தராமன் பேசுகையில்,  
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசுவதும் அதற்கு முதல்வர், அமைச்சர்கள் பதிலளிப்பதும் செயலர்களுக்கு புரிவவதில்லை. கருத்துகள் மொழி மாற்றம் செய்து தரப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் பணிக்காக உறுப்பினர்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்பது அவர்களுக்குப் புரியும் என்றார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே செயலர்களாக 
புதுவைக்கு அனுப்பிவைக்கிறது. மத்திய அமைச்சர்களைச் சந்திக்கும் போது, தமிழ் தெரிந்தவர்களை புதுவைக்கு அனுப்பும்படி வலியுறுத்தி வருகிறேன். ஆனாலும், இந்தி மட்டும் அல்லது ஹிந்தியும், ஆங்கிலமும் அறிந்தவர்களை மட்டுமே அனுப்பிவைக்கிறது.  புதுவை பேரவையில் 95 சதவீதம் தமிழில்தான் விவாதம் நடைபெறுகிறது. எனவே, தமிழ் தெரிந்தவர்களை புதுவைக்கு செயலர்களாக அனுப்பிவைக்க மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT