புதுச்சேரி

டிஜிபி அலுவலகம் எதிரே ஆம் ஆத்மி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

7th Sep 2019 08:55 AM

ADVERTISEMENT

புதுவை டிஜிபி அலுவலகம் எதிரே ஆம் ஆத்மி நிர்வாகி வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்தவர் மணிமாறன் (43). ஆம் ஆத்மி கட்சியியின் தொழிற்சங்கத் தலைவர். வெள்ளிக்கிழமை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த அவர், திடீரென கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், உடனே அவரை தடுத்து உடலில் தண்ணீர் ஊற்றினர். தகவலறிந்த பெரியக்கடை போலீஸார் அங்கு வந்து, மணிமாறனை கைது செய்து, அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், புதுச்சேரியில் "போராளிகள்' என்ற கட்செவி அஞ்சல் குழு இயங்கி வருகிறது. இந்தக் குழுவில் உள்ள சிலர் தனது செல்லிடப்பேசியை வயப்படுத்தி (ஹேக்) தகவல்களைத் திருடினர். அதை வைத்து தன்னையும், தனது குடும்பத்தையும் கட்செவி அஞ்சலில் (வாட்ஸப்) தரக்குறைவாக வெளியிட்டு, ரூ. 5 லட்சம் கேட்டு தொடர்ந்து மிரட்டுவதாகவும், அதன் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு அறிவுரை கூறிய போலீஸார், உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளிக்குமாறு அனுப்பி வைத்தனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT