புதுச்சேரி

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

4th Sep 2019 10:08 AM

ADVERTISEMENT

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினர் புதுச்சேரி உதவி ஆட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், 2014 நில எடுப்புச் சட்டத்தை காலதாமதமின்றி திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி, நாடு முழுவதும் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, புதுச்சேரி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை சாரம் ஜீவா சிலை அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்ட விவசாயிகள், சாரத்தில் உள்ள உதவி ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றனர்.
பேரணியை முன்னாள் அமைச்சர் விசுவநாதன் 
தொடக்கிவைத்தார். விவசாயிகள் சங்க சிறப்புத் தலைவர் மாசிலாமணி, தலைவர் ரவி, பொதுச் செயலர் கீதநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் சலீம், புதுச்சேரி விவசாயத் தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
பேரணியாக வந்தவர்களை போலீஸார் உதவி ஆட்சியர் அலுவலகம் அருகே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, விவசாயிகள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நெல்லுக்கான 3 போக சாகுபடி ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT