புதுச்சேரி

பொதுப் பணித் துறை பணிநீக்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

4th Sep 2019 10:05 AM

ADVERTISEMENT

புதுவை பொதுப்பணித் துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் ஒரு பிரிவினர் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை அரசின் பொதுப் பணித் துறையில் கடந்த 2015-ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட 2,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 2016-ஆம் ஆண்டு தேர்தல் துறை உத்தரவால் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஒரு பிரிவினர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர். இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், பொதுப் பணித் துறை தலைமை அலுவலகம் முன் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டிபிஆர்.செல்வம், ஜெயபால் ஆகியோருடன் நூற்றுக்கும் 
மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காமராஜர் பொதுப்பணித் துறை ஊழியர்கள் நலச் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் அன்பரசன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் கல்யாணசுந்தரம், பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்று, ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்தனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், இது தொடர்பாக நிகழ் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் முடிவதற்குள் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT