புதுச்சேரி

பேரவை நிகழ்வுகளை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்

4th Sep 2019 10:07 AM

ADVERTISEMENT

புதுவை சட்டப்பேரவை நிகழ்வுகளை தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.
தமிழகம் உள்ளிட்ட பிற மாநில சட்டப்பேரவை நிகழ்வுகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நேரில் பார்த்து அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், புதுவை சட்டப்பேரவையில் அதுபோல இதுவரை எந்த மாணவ, மாணவிகளும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் சட்டப்பேரவையில் உள்ள பொதுமக்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் உறவினர்கள், உதவியாளர்கள் அமரும் பகுதியில் அமர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளை முதல்முறையாக நேரில் பார்த்து அறிந்துகொண்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பேரவை நிகழ்வுகளை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT